2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை முன்னிட்டு சிரமாதானப் பணிகள் இன்று (25)ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மாவடிச்சேனை,  கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை முன்னிட்டு வீடுகள், பாடசாலை, பொதுத்தளங்கள் என பல இடங்களில் சிரமதான நிகழ்வுகள் இடம் பெற்றது.

இந் நிகழ்வில், கிராம சேவை அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழக  இளைஞர்கள், கழக உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பகுதியில், டெங்கு நோயின் தாக்கங்கள் அதிகரித்து காணப்படுவதால், டெங்கு பரவும் இடங்கள் அடையாளங் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விழிப்பூட்டல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X