Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பு பெருக கூடிய வகையில் வீடுகள் மற்றும் சுற்றுப்புற சூழலை அசுத்தமாக வைத்திருந்த 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
கடந்த நான்கு தினங்களாக காத்தான்குடி நகர சபை பிரிவில் வீடுகள் தோறும் இடம்பெற்ற டெங்கு சோதனை நடவடிக்கையின் போதே, இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவுதம் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகம், மற்றும் காத்தான்குடி நகர சபை ஆகிய இணைந்து காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இந்த டெங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவர்கள், 15 குழுக்களாக பிரிந்து 4,000 வீடுகளை இதன்போது சோதித்துள்ளனர்.
இதில் டெங்கு நுளம்பு பெருக கூடிய வகையில் வீடுகள் மற்றும் சுற்றுப்புற சூழலை அசுத்தமாக வைத்திருந்த 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும், இவர்கள் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், சில வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த டெங்கு சோதனையின் போது டெங்கு தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
47 minute ago