2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

டெங்கைக் கட்டுப்படுத்த கிழக்குக்கு ரூ.1 மில். ஒதுக்கீடு

Editorial   / 2018 மே 30 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம, ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.

டெங்கு பரவுவதைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலே, கிழக்கு மாகாண சபையின் சுகாதாரத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதியில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதால், டெங்கைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஆளணிகளையும், வளங்களையும், உள்ளூராட்சி மன்றங்களினூடாக பெற்றுக்கொள்ளுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளாரெனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் டெங்குத் தொற்று பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X