2025 மே 02, வெள்ளிக்கிழமை

டெங்கொழிப்பு முன்னெடுப்பு

Editorial   / 2020 மே 19 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பிரதேசத்துக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை இன்று (19) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி பொதுச் சுகாதர பரிசோதகர் கே.இளங்கோவன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பகுதியில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக வீடு வீடாகச் சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.

டெங்கு நுடங்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, டெங்கு நுளப்புப் பெருக்கும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களையும், பொருட்களையும் அதற்குரிய சூழலையும் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக, பொதுச் சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, செட்டிபாளையம் பொதுச் சுகாதர பரிசோதகர் எஸ்.சிவசுதன், பொதுச் சுகாதர வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X