Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, தொப்பிகலப் பகுதியை அண்மித்த காட்டுப்;பகுதியில் தேக்குமரக் குற்றிகளுடன் 4 பேரை இன்று திங்கட்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதுடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து 6 மற்றும் 12 அடி நீளம் கொண்ட சுமார் 30 மரக்குற்றிகளை எல்ப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில்; கைப்பற்றியுள்ளதாக புல்லுமலை வட்டார வன இலாகா அதிகாரி நா.நடேசன் தெரிவித்தார்.
மேலும், இச்சந்தேக நபர்களையும் கைப்பற்றிய மரக்குற்றிகளை வாகனத்துடன்
கரடியனாறு பொலிஸாரி;டம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றுக்கு விற்பனைக்காக நரக்கமுல்ல காட்டுப்பகுதியூடாக இம்மரக்குற்றிகள் கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி மரக்குற்றிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை நீண்ட நாட்களாக இடம்பெறுவது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பகுதியில் வன இலாகா அதிகாரிகள் மறைந்திருந்து மரக்குற்றிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago