Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன், வா.கிருஸ்ணா
கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக, ஏறாவூர் பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த ரெட்ணசிகாமணி புண்ணியமூர்த்தி என்பவர், தனது வீட்டில் இருந்தபோது, கடந்த 17.07.2007 அன்று கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, இவர்கள் iது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 07.11.2015 அன்று, இவ்விடயம் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், புலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சிவப்பிரகாசம் மற்றும் சித்தாண்டியைச் சேர்ந்த பிள்ளையான் நித்தியானந்தம் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன், ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பதாக, காணாமல்; போனோரின் உறவினர்கள், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவில் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
58 minute ago
1 hours ago