Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 13 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி அல்மனார் வளாகத்தி;ல் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல்முனீரா பெண்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் இஸ்லாமிய பாடநெறிகளுக்கான நிலையம் இன்று(13) மாலை திறந்து வைக்கப்பட்டது.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபியாவின் சட்ட ஆலோசகர் அஸ்ஸெய்ஹ் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் ஆகியோர்; இதனை திறந்து வைத்தனர்.
அல்மனார் நிறுவனத்தின் பணிப்பாளர்; யு.எல்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அல்மனார் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனீ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சவூதிஅரேபியா நாட்டின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் பெண்களுக்கான பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் இஸ்லாமிய பாடநெறிகளும் நடைபெறவுள்ளதாக அல்மனார்; நிறுவனத்தின் செயலாளர்; மௌலவி ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனீ தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago