2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தச்சுத் தொழில் நிலையம் தீக்கிரை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

தச்சுத் தொழில் நிலையமொன்று, நேற்றிரவு (07) 8.30 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு அருகிலுள்ள முகம்மட் ஹனீபா முகம்மட் சமீம் என்பவருக்கு சொந்தமான தச்சுத் தொழில் நிலையயே, இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இந்த நிலையம் தீப்பற்றி எரிவதைக் கண்ட மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்தில் அங்கிருந்த பெறுமதியான பல மரங்கள், இயந்திரங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.

தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியாத நிலையில் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் இயந்திரம் உடனடியாக வரவழைக்கப்பட்டு, வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி பிரதேச சபை  ஊழியர்கள், அங்கு ஒன்று திரண்ட பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .