Niroshini / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
இலங்கை தேர்தல் முறைமை சீரமைக்கப்பட்டு பல்வேறு சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தமது பிரதிநிதித்துவம் அரசியலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையிலும், தமக்கான பிரதிநிதிகள் நாடாமன்றத்துக்கு செல்லாத காரணத்தினால், தமது பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகளையும் அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குமாறு கோரும் விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரும் டெலோ உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், மாற்றுத்திறனாளிகள் அரசியலுக்குள் உள்வாங்கப்படவேண்டிய அவசியம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்பட்டன.
இதன்போது, அனைவருக்குமான நீடித்து நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு முழுமையான செயல்திறனான மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்களிப்பினை நாம் மேம்படுத்துவோம் என்னும் உறுதிமொழியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனர்.


3 minute ago
8 minute ago
17 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
17 minute ago
17 minute ago