2024 ஜூன் 17, திங்கட்கிழமை

தமிழ் மக்களுக்கு நாமல் கூறும் செய்தி

Freelancer   / 2024 மே 25 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 

கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (25) மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை குறிப்பிட்டார். 

இதன்போது, அனைத்து ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, இம்முறை அவ்வாறு நடக்காமல், அறிவுப்பூர்வமான தீர்மானத்தை தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். 

தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்களுக்காக பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 

தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெறாத மஹிந்த ராஜபக்ஸ தான் தமிழர்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றியதாக அவர் மேலும் தெரிவித்தார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X