Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நியாயமான தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று(10) தெரிவித்தார்.
அனுராதபுரச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள, உண்ணவிரதப் போராட்டம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலங்காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதும் அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்படுவதுமாக உள்ளது.
இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நாட்டில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இதுவரை எவ்விதமான தீர்க்கமான முடிவுகள் வழங்கப்படவில்லை.
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.
இதனால் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பட்சத்தில் அதனை பாரிய நல்லிணக்க விடயமாக சர்வதேச சமூகம் பார்க்கும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை என்பது, சிறுபான்மையினர் மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்.
இவ்விடயம் தொடர்பாக, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் மனோகணேசன் போன்றோர் அரசாங்கத்துக்கு வலியுறுத்த வேண்டும்,
நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் அது மக்கள் மனங்களூடாகவே கட்டியெழுப்பபட வேண்டும் என, அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025