Freelancer / 2022 மே 09 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை, மட்டக்களப்பில் நேற்று (08) முன்னெடுத்திருந்தனர்.
செங்கலடி சந்திவரை பேரணியாகச் சென்று அங்கு “கோட்டா கோ ஹோம் கம” வை அமைத்து, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
“அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள்,
“உணவு இல்லை”, “பால்மா இல்லை” , “எரிபொருள் இல்லை”, “மின்சாரம் இல்லை”, “கொள்ளைக்கார பொருளாதார முறைமைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்”, “மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கொடு”, “அடிக்காதே! அடிக்காதே!, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே“, உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த பௌத்த தேரர்களில் பலரும், தமிழ் மொழில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தமை விசேட அம்சமாகும்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025