2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் நியாயமானவை’

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான்

கடந்த காலங்களில், தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் நியாயமானவை எனத் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்த கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்ப்பாசன இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தமிழ் - முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்தே இந்த அரசாங்கத்தை நிலைநாட்டியுள்ளோம் என்றார்.

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வைபவத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் நலனில் தாங்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம் எனத் தெரிவித்ததுடன், எனினும், பழைய புண்ணை வைத்துக்கொண்டு அரசியல் தலைமைகள் அரசியல் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதாகல், தங்களின் சமூகம் சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X