Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக தமிழர் ஒருவர் வந்துவிடக் கூடாது என்பதற்கான செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம், கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் சிலர், தேசிய இனவாதக் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்தே, இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.
மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற, சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டுவர முடியும். தமிழ்க் கட்சிகள் பிரிந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டால் அது இல்லாமல் போய்விடுமெனத் தெரிவித்த அவர், “இதற்கான முழுப் பொறுப்பும் தமிழ்த் தலைமைகளிடமே உள்ளன. கிழக்குத் தமிழ் மக்கள் இச்செயலை மன்னிக்க மாட்டார்கள். இது ஒரு கறைபடிந்த வரலாறாகவே மாறும்” என்றார்.
“பணத்துக்கும், கொடுப்பனவுகளுக்கும், சலுகைகளுக்கும், விலைபோய் தரகர்களாகியுள்ள சில தமிழ் அமைப்புகள், அமைப்பாளர்கள், தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்து விடக் கூடாது என்பதற்கான செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, கொள்கைகளைக் கூறியும், இனவாதத்தை உண்டாக்கியும் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து, எதிர்வரும் தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கும், வாக்களிக்கும் சதவீதத்தை குறைப்பதற்கும் வேலைத் திட்டங்களை இவர்கள் ஆரம்பித்துள்ளனரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதெனத் தெரிவித்த அவர், அவ்வாறானவர்களை மக்கள் இனங்கண்டு நல்லபாடம் புகட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
தமிழர்களாகிய நாம் விலைமதிப்பற்ற உயிர்களை தமிர்களின் உரிமைக்காக தியாகம் செய்துள்ளோம். இத்தியாகத்தின் பெயரால் மாகாணசபையின் அதிகாரம் அமுலாக்கப்பட்டன. இவ்வதிகாரத்தை தற்காலிகமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமே உள்ளனவெனத் தெரிவித்த அவர், எதிர் வரும் காலங்களில் தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வை முன்வைக்கும் வரை தற்சமயம் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தில் முன் வைக்கப்பட்ட அதிகாரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தமிழர் அனைவரிடமும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் மொத்தம் 37 ஆசனங்களில் தமிழர்கள் 40 சதவீதம், முஸ்லிம்கள் 37 சதவீதம், 23 சதவீதம் சிங்களவர்கள் உள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அவர், “இந்நிலையில் 37 ஆசனங்களில் அதிகமான ஆசனங்களைப் பெறுவதற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால், அந்த ஆசனங்களைப் பெறமுடியும்” என்றார்.
“அண்ணளவாக, 15 ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள்” என்று தெரிவித்த அவர், “தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் மூன்று இனத்தவர்களும் போட்டியிடுவார்கள். எம்மைப் பொறுத்தவரையில் அதிக ஆசனங்களைப் பெறும் இடத்து தேசியக் கட்சிகளுடன் கொள்கை ரீதியாக பேச்சுவார்த்தை செய்து முதலமைச்சரை பெறமுடியும்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago