Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 15 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் -முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் சீர்குலைப்பதற்கு மறைமுகமாகச் சில சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.சஹீத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஏறாவூர் நஜ்முல் உலூம் மதரசா மண்டபத்தில் புதன்கிழமை (14) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது முஸ்லிம் சிவில் சமூக அமைப்பை ஆரம்பிப்பதற்காக 21 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த உறுப்பினர்கள் காத்தான்குடி ஏறாவூர்இகல்குடா ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனங்கள்இ உலமா சபைகள்இ சில நிறுவனங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது 'கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் நிலையில்இ இவ்விரு சமூகங்களையும் பிரிப்பதற்கு சில தீய சக்திகள் திரைமறைவில் செயற்பட்டு வருகின்றன.
'எனவே இம்மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும் தமிழ் மக்களும் எப்போதும் இன ஐக்கியத்துடன் வாழ வேண்டும்' என்றார்.
'தற்போது இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள்இ இந்த நாட்டின் இன ஐக்கியத்துக்கும் நல்லுறவுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
'எனவே இந்த விடயங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டுஇ இனவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'மட்டக்களப்பிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் போன்ற கையாளுவதற்காகவும் முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை பல்வேறு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago