2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மார்ச் 25 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமைப்படாதவரை காலாகாலமாக அனுபவித்து வரும் தீவினையிலிருந்து ஒருபோதும் மீள முடியாதென, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

எறாவூரில் நேற்று (24) இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், இன அடிப்படையில், பௌதீக வளங்களை வாரி வழங்குவதால் நாம் ஒருபோதும் தீவினையிலிருந்து நீங்கி, மீட்சி பெற்றுவிட முடியாதெனக் கூறியதுடன், அதற்குப் பதிலாக மனித மனங்கள் ஒன்றிணைய வேண்டுமென்றார்.

குறிப்பாக, நாட்டிலுள்ள சிறுபான்மையினராகிய தமிழர்களும் முஸ்லிம்களும், வடக்கு, கிழக்கில் முதலில் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக, “தமிழ் மொழியால் இணைவோம்” என்ற அடிப்படையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனக் கூறிய அவர், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக சமூக இணக்கப்பாட்டு வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்துச் செய்யப்படுவோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X