Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 மே 29 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் மாத்திரமே தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியும். இதனூடாக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவும் முடியும். இது சாத்தியப்படாத பட்சத்தில், தமிழ்க் கட்சிகளுக்குள் மாவட்ட ரீதியான போட்டித் தவிர்ப்பை தமிழ்த் தலைமைகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமென, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணையாளரைப் பொறுத்தவரையில், எந்தத் தனி ஒரு கட்சிக்கு ஆகக் கூடிய ஆசனம் உள்ளதோ அந்தக் கட்சியே ஆட்சி அமைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுவது சட்ட திட்டமாகும் எனத் தெரிவித்தார்.
தமிழ்த் தலைமைகளுக்குள் நடைமுறை ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ கட்சிகளுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பழைய கோபத்தில் கிழக்கு மாகாணத்தில் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவார்களேயானால், அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒரு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதி இல்லாமல் போனது போல, கிழக்கு மாகாணத்திலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகும்.
எனவே, இதை உணர்ந்து எமது தலைமைகள், வரட்டுக்கௌரவம் பாராது, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் கூட்டேதும் ஏற்படக்கூடியவாறு செயற்றிட்டங்களை முன்வைக்குமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.
மேலும், இக்கருத்துகளை மறுதலிக்கும் பட்சத்தில், கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கட்சிகளை ஒன்று திரட்டுவதற்காக பாரியதொரு விழிப்பு கவனயீர்ப்பை நடாத்தி, தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்கு அணிதிரளுமாறு அழைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago