2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’தமிழ்க் கட்சிகள் ஒன்றுசேரும் காலம் கனிந்துள்ளது’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணத்தில் தமிழ்க்; கட்சிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட்டு, ஒன்றுசேர வேண்டிய காலம் கனிந்துள்ளது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில்; எந்தவித மோதல்; ஏற்பட்டாலும், அதனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் மோதல் ஏற்படின், அது இங்குள்ள தமிழ் மக்களையே பாதிக்கும் எனவும் அவர்  கூறினார்.

களுமுந்தன்வெளி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களையும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில்; சித்தி பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு,  சனிக்கிழமை (1)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'வட மாகாணத்தில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள்  ஏற்பட்டால், அவை அங்குள்ள  மக்களைப் பாதிக்கப் போவதில்லை. எது எவ்வாறாயினும், அங்கு  தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே ஆட்சி அமைக்கும் நிலைமை உள்ளது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில்; முரண்பாடுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட  கட்சிகளுக்கும்  பாதிப்பு. அதனால், தமிழ் மக்களுக்கும் பாதிப்பு. இந்த நிலைமை மாற வேண்டும். எதிர்காலத்தில் எம்மை நாமே  ஆளக்கூடிய சுயாட்சியை உருவாக்குவதற்கு நாம்; அனைவரும் பாடுபட வேண்டும்' என்றார்.

 'தற்போது வட மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறிய குழப்பம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்குடன் வெளிநாட்டு உதவி அமைப்புகள் வட மாகாணம் நோக்கிப் படையெடுக்கும் நிலைமை உள்ளது. ஆனால், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தற்போது இம்மாகாணத்தைப் பொறுத்தவரையில் கட்சி மற்றும் மதத்துக்கு அப்பால் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இணைந்த வட,கிழக்கு என்றால், நாம்; கவலையடைய வேண்டிய அவசியம் இல்லை. கிழக்கு மாகாணம் தனித்து நிற்கும்போது, நாம்  ஒன்றாகச்  செயற்பட வேண்டும். எமக்குள் நாம் முரண்பட்டுக்கொண்டு, பிரிவோமாயின் அதனால் பாதிக்கப் போவது  கிழக்கு மாகாணத்தைச் தமிழ் மக்களே ஆவர்' என்றார்.

'மேலும், இந்த வருட இறுதியில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இந்தத்  தேர்தலின்போது, கடந்த முறை விட்ட தவறை தமிழ் மக்கள் இம்முறை விடக்கூடாது. இம்முறை 15 உறுப்பினர்களைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. அந்த நிலைமை ஏற்பட்டால், எமது பிரதேசத்தை நாம்  அபிவிருத்தி செய்யும் நிலைமை ஏற்படும்' என்றார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X