Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
2003ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் தரிசனம் விழிப்புலனற்ற பாடசாலையில்; கல்வி கற்று 25 பேர் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாக வெளியாகி சமூகத்துக்கு சேவை செய்கின்றனரென அப்பாடசாலையின் தலைவர் எம்.தயானந்தன் தெரிவித்தார்.
'ஆசிரியர்களை வலுவூட்டி நிலைபேறான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இம்மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நொச்சிமுனையிலுள்ள பாடசாலையில் திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பட்டம் பெற்று வெளியேறிய எமது மாணவர்களில்; 15 பேர் ஆசிரியர்களாகவும் 10 பேர் அபிவிருத்தி உத்தியோகஸ்;தர்கள் மற்றும் சமூகசேவை உத்தியோகஸ்தர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கல்வியில் சிறந்த அடைவு மட்டத்தைப் பெற்று சாதனை புரிவதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை வெளிக்காட்டுகின்றது.
இங்குள்ள மாணவர்கள் கலைத்துறைகளிலும் திறமையாக விளங்குகின்றனர்' என்றார்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான த.யுவராஜன், எம்.குருகுலசிங்கம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

22 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago