2025 மே 08, வியாழக்கிழமை

தர்மபாலவின் பிறந்ததினத்தை முன்னிட்டு நிகழ்வு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தர்மபால பரம்பரை ஒன்றை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளிலான விசேட நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீமத் அனாகரீக தர்மபாலவின் 150ஆவது பிறந்த தினத்தை அனுஷ்டிக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதியின் பணிப்பில் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் மதத்தலைவர்களான மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தேவதாசன் அடிகளார், மாவட் செயலக சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வர சர்மா, மட்டக்களப்பு ஜும்மா பள்ளிவாசல் மௌலவி எம்.ஐ.எம்.நளீம், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி ஜீ.திருச்செல்வம், பிரதம கணக்காளர் எஸ்நேசராஜா,  திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X