Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில், எதிர்வரும் 2019 ஆண்டில் தரம் 1 வகுப்புகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு, ஜனவரி 17ஆம் திகதியன்று நடத்தப்படவேண்டுமென, வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 76 பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு இயங்கும் 65 பாடசாலை அதிபர்களுக்கும், இந்த அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இதுபற்றி கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் சுற்றுநிருபம் மூலமாக அறிவித்துள்ளது.
இச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய மாணவர்களை பாடசாலைக்குச் சேர்க்கும் பணிகள் அனைத்தும், ஜனவரி 17ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வகுப்புக்களை ஆரம்பிக்கும் தினமான ஜனவரி 17ஆம் திகதியன்று புதிய சிறார்கள், பெற்றோர்கள், அதிதிகளை வரவேற்றல், தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகளை ஏற்றுதல், கீதம் இசைத்தல், புதிய சிறார்களை வரவேற்க சிறப்பான கலை நிகழ்வுகளையும் நடத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் புதிய மாணவர்களுக்கும் முன்னுரிமை கிடைக்கும் விதத்தில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், விழா ஒழுங்கமைப்பின்போது, சிறார்களுக்கும் பெற்றார்களுக்கும் வசதியீனங்கள் ஏற்படாதவகையில் நடைபெற கவனஞ்செலுத்தப்பட வேண்டும் எனவும் அச்சுற்றுநிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
1 hours ago