2025 மே 15, வியாழக்கிழமை

தலைமறைவாகியிருந்த இருவர் கைது

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த இருவரை, ஏறாவூர்ப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

ஏறாவூர்ப் பொலிஸாருக்கு, நேற்று (19) மாலை கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து, ஐயன்கேணி பகுதியில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஐயன்கேணிப் பகுதியில் சமீப காலமாக வாள்வெட்டு, வழிப்பறி போன்ற செயற்படுகள் இடம்பெறுவதாக ஏறாவூர்ப் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .