2025 மே 01, வியாழக்கிழமை

‘தவறான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்’

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தவறான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென, பத்மநாபா மன்றம், இன்று (25) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப்.இன்  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம்,  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வாக்களித்தல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, அவர் இதனைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 “மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கடந்த கால தமிழர்களின் வலிகளை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடியவாறு செயற்றிட்டங்களை முன்வைத்து அமல்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

“இதை விடுத்து, சுயநலனுக்காக தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக பல குழுக்களாகப் பிரிந்து பிரதிநிதிகளை இல்லாமல் செய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். இதைப் புரிந்துகொண்டு, வாக்குகளைப் பிரிப்பதற்காக துணைபோயுள்ள வேட்பாளர்கள் ஒதுங்கிக்கொள்ளவும்” என அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .