2025 மே 07, புதன்கிழமை

தவிசாளருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 ஜூன் 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்

அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பைக்கு  கடந்த 31ஆம் திகதி  கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (03) தான் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, அண்மையில் தன்னை தொடர்புகொண்ட நபர்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு வேண்டுகிறேன் என்று தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், ஓட்டமாவடி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சபை உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X