2025 மே 19, திங்கட்கிழமை

தாக்கிய சந்தேகநபர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக தாமரை மொட்டு சின்னத்தின் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பொதுப் பட்டியல் வேட்பாளரான யுவதி ஒருவரும் பிரசார ஆதரவாளர்களான இருவர் உட்பட 3 பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை, நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X