2025 மே 03, சனிக்கிழமை

தாண்டியடி அதிரடிப்படையினரால் தானம் வழங்கும் நிகழ்வு

A.K.M. Ramzy   / 2020 மே 08 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் , ரீ.எல்.ஜௌபர்கான்

மட்டக்களப்பு தாண்டியடி விஷேட அதிரடிப் படையினரால் வெசாக்  பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு வவுணதீவு பிரதேசத்திலுள்ள காஞ்சிரங்குடா, 

சில்லிக்கொடியாறு, பனையறுப்பான் போன்ற கிராமங்களிலுள்ள மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

வவுணதீவு விசேட அதிரடிப்படைப் முகாம் பொறுப்பதி காரி எம்.டி.எல்.விஜேரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது  சமைத்து பொதி செய்யப்பட்ட

உணவுடன் ஜேக்கட் போன்றவையும் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கிராம மக்களின் வீடுகளுக்குச்

சென்று சமைத்த உணவுகளை இந்த புனித நாளில் வழங்கியுள்ளனர்.இன்றைய வெசாக்  பௌர்ணமி தின புனிதமான நாளில் அன்றாடம் கூலித் தொழில் புரிந்து

வாழ்கைநடத்தும் கிராம மக்களுக்கு இந்த தானம் வழங்குவதையிட்டு நாங்கள் மிகுந்த மன நிறைவடைகின்றோம் என தாண்டியடி விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X