Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 21 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவும் தற்காலத்தில், ஏறாவூர் சபைப் பிரிவில் சேரும் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதும் பெரும் சவாலாக மாறியுள்ளதாக, ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு, நகர சபைத் தலைவரின் தலைமையில், நகர சபை மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர சபைத் தலைவர் அப்துல் வாஸித் தொடர்ந்து உரையாற்றியதாவது, “நகர திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் நாம் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மையே பிரதான காரணமாகும்.
“வீட்டில் சேரும் கழிவுகளை திண்மக் கழிவுகளை உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள், மீள் சுழற்சிக்கான கழிவுகள் என மக்கள் தரம் பிரித்து கழிவகற்றும் வாகனங்கள் வரும்போது வழங்குவார்களாயின் திண்மக் கழிவகற்றலை முகாமைத்துவம் செய்வதில் எந்தவிதமான பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியதில்லை.
“ஆனால், இந்த விடயத்தில் மக்கள் தெளிவடைந்து கொள்ளாததே திணமக் கழிவகற்றலை முகாமைத்துவம் செய்வதில் தடையாக உள்ளது. இதனால் மக்களுக்கிடையில் முழுமையான விழப்புணர்வை வழங்கும் வகையில் நகர சபை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .