2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தியேட்டர் மோகனுக்கு விளக்கமறியல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை (தியேட்டர் மோகன்), பெப்ரவரி 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம், நேற்று (06) உத்தரவிட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலையைக் குழப்புவதற்கு அழைப்பு விடுத்துச் செயற்பட்டு வந்தாரென, இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இவர் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான போதே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X