2025 மே 21, புதன்கிழமை

திருப்பெருந்துறை குப்பை விவகாரம்: 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் குப்பை கொட்டப்படுவது தொடர்பான வழக்கு, சட்டமா அதிபர் , அரசாங்க அதிபர் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்வதற்காக, எதிர்வரும் 16ஆம் திகதிக்கு, மட்டக்களப்பு மாவட்ட  மேல்நீதிமன்ற நீதிபதி எம்.ஐ .இர்ஷதீன், இன்று (04) உத்தரவிட்டார்.

திருப்பெருந்துறை கிராம மக்களால் திருப்பெருந்துறை பகுதியில் கொட்டப்படும் கழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 30.08.2017  அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட  மனுவை  விசாரணைக்கு எடுத்துகொன்ண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மட்டக்களப்பு மாநகர சபையால் திருப்பெருந்துறை பகுதியில்  கொட்டப்படும் குப்பைகள்  மற்றும் கழிவுகளை   நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவைப்  பிறப்பித்திருந்தார்

இந்நிலையில், மாநகர சபையால் குறித்த இடைகால தடை உத்தரவை  ரத்து செய்யுமாறு கோரி, மாவட்ட மேல்நீதிமன்றில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட மனுவை,  கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம்திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட  மேல்நீதிமன்ற நீதிபதி எம் ஐ .இர்ஷதீன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்வதாக  உத்தரவு பிறப்பித்திருந்தார்.    

குறித்த மனு தொடர்பான விசாரணைகள்,  மாவட்ட  மேல்நீதிமன்ற நீதிபதி எம் ஐ.இர்ஷதீன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது எதிர்தரப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதுடன், குறித்த மனு தொடர்பான விசாரணைகள் குறித்து சட்டமா அதிபர் , அரசாங்க அதிபர் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 16ஆம் திகதி வரை குறித்த வழக்கை ஒத்திவைக்கப்பதாக, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .