Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.டி யுதாஜித்
“எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை தியாகம் செய்த திலீபனை, அமைச்சர் டக்ளஸ் போன்றவர்கள் விமர்சிப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது” என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்பிலும் தியாகி திலீபன் தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நாடாளுமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில், “விடுதலைப் புலிகளின் தலைவரையும் அதன் போராளிகளையும் பற்றிக் கதைப்பதற்கு டக்ளஸுக்குத் தகுதி இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, தமிழ் மக்களுக்காகப் போராடிய ஓர் அமைப்பையும் அதன் தலைவரையும் அவதூறாகக் கதைப்பதென்பது, அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்” என்றார்.
“டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்க்கை வராலாறுகள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதால், அவரால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் அனைத்தையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள்.
“டக்ளஸ் தேவானந்தால் சொல்லப்பட்ட விடயங்கள் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் சொல்லப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், எம்மினத்தில் இருந்து வந்து டக்ளஸ் சொல்வதென்பது அவருக்கு வாக்களித்த மக்களின் வாக்கை கேள்விக்குட்படுத்துவனாக அமையும். இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்த எமது மக்கள் தான் இது குறித்து வருத்தப்பட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago