2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தீ விபத்து; வீடு, உடமைகள் முற்றாகச் சேதம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர் நகரில் நேற்று முன்தினம் (31) இரவு இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில், வீடொன்றும் அவ்வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகர மத்தி, முனைவளவு வீதியை அண்டியுள்ள வீடொன்றே தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.

அந்த வீட்டில்  நீண்ட காலமாக வசித்து வந்த  வாடகைக் குடியிருப்பாளர்கள், சம்பவ தினத்துக்கு முதல்நாள், ஏறாவூரிலிருந்து தம்பாளை எனும் ஊருக்குச் சென்றிருந்த வேளையிலேயே, வீடு பூட்டப்பட்டுக் கிடந்த நிலையில் தீப்பற்றிக் கொண்டுள்ளது.

தீ சுவாலை விட்டு எரியத் துவங்கியதும் விபரீதம் நடப்பதை அறிந்துகொண்ட அயலவர்கள், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X