Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்குடா, பட்டியடிச்சேனையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
பட்டியடிச்சேனை, ஜிரிஇசட் வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த ஒருவரது முச்சக்கரவண்டியே, தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதுடன், அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளும் எரிந்துள்ளது.
வீட்டில் அனைவரும் நித்திரையில் இருக்கும் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வித்தியாசமான, கருகிய மணம் வருவதை உணர்ந்த வீட்டில் இருந்தவர்கள், உடனே வெளியில் சென்று பார்க்கும் போது, முச்சக்கர வண்டி எரிவதை அவதானித்துள்ளனர். உடனே அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்த போதும், முச்சக்கர வண்டி எரிந்துள்ளது.
தீயினால் வீட்டின் சிறு பகுதியும் எரிந்துள்ளதுடன், வீடு முழுவதும் தீ பரவாது தடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை, கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
37 minute ago