2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 18 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கறுப்புக்கொடிகளைக் கட்டி, பந்தல் அமைத்து  சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அப்பல்கலைக்கழக மாணவர்கள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

கடந்த 7ஆம் திகதி முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களின்  போராட்டம்  நேற்றுடன் 12ஆவது நாளை எட்டியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 4ஆயிரம் பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலுமுள்ள மக்களிடமிருந்து சுமார் 2 ஆயிரம் கையொப்பங்களை தாம் எதிர்பார்த்தபோதும், இதுவரையில் சுமார் 4 ஆயிரம் பேர் தமது கோரிக்கை மனுவில் கையொப்பம் இட்டுள்ளனர் என சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பட்ட கால எல்லைக்குள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய வேண்டும், மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும், பொய்யான தீர்வுகள் வேண்டாம் என்பதுடன்,  விடுதிப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும், அசாதாரணமான வகுப்புத் தடையை நீக்க வேண்டும், மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள  சீ.சீ.டி.வி கமெராக்களை உடனடிhயக அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X