Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2017 செப்டெம்பர் 01 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
துறைநீலாவணை கிராமத்திலுள்ள பொது மயானத்தில், பாரிய டெங்கு சிரமதானமொன்று இன்று (01) நடைபெற்றது. துறைநீலாவணை கிராமத்தில் உள்ள நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பொதுமக்களால், மயானம் துப்புரவு செய்யப்பட்டது.
சுமார் 1,500 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். துறைநீலாவணை கிராமத்துக்குப் பொறுப்பான கிராம சேவையாளர்களான தி.கோகுலராஜ், வ.கனகசபை ஆகியோர்களின் துரித முயற்சியால் இச்சிரமதானம் ஒழுங்கு செய்து நடைபெற்றது.
பற்றைக்காடுகள் வளர்ந்து கல்லறைகளையும் புதைகுழிகளையும் மூடிக்காணப்பட்டன. இதனைக் கருத்திற்கொண்டே இரு கிராமசேவையாளர்களும் இதனை ஒழுங்கு செய்தார்கள்.
பற்றைக்காடுகள் பொதுமயானத்தில் வளர்ந்து காணப்படுவதால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வரும் பொதுமக்களுக்கு பாரியதொரு இடையூறாகத் திகழ்ந்தது. இதனை கருதிற்கொண்டு இச்சிரமதானம் ஒழுங்கு செய்து நடைபெற்றது. இதனால் பொதுமயானம் துப்புரவுமிக்கதாக காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
9 hours ago