Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் 9ஆவது அமர்வு, தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில், பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) நடைபெற்றது.
இச்சபை அமர்பின்போது, 2019 ஆம் அண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார்.
இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை பிறிதொரு நாளில் விசேட அமர்வு ஒன்றை நடத்தி, அதில் விவாதித்து சபையில் அங்கிகாரம் பெறுவோமென, சபை உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்ததையடுத்து, சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் விசேட அமர்வில் விவாதித்து அங்கிகரிப்பதற்காக பிற்போடப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago