2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகள், மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால், இன்று (16) கைப்பற்றப்பட்டன.

சந்திவெளி சித்திவிநாயகர் கோவிலுக்குப் பின்புறமாகவுள்ள களப்பு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த தேக்கு மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு நேற்றிரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை சென்ற மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினரே, இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், தேக்கு மரங்களை கொண்டுசெல்லப் பயன்படுத்தப்படும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .