2025 மே 02, வெள்ளிக்கிழமை

தேசியம் பேசிப் பேசி, மக்களை ‘உசுப்பேத்தியோர் வாழ்கின்றனர்’

Editorial   / 2020 ஜூன் 07 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி   

மக்களை உசுப்பேத்தி வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் வாக்களித்த மக்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் என்றும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் ஞானமத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உதட்டால் தேசியம் பேசிப் பேசி, மக்களை உசுப்பேத்தி, வாக்குகளைப் பெற்று வாழ்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் எனக் கூறிய, “நாடு கேட்டோம், தமிழ் நாடுகேட்டோம், ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்ட்டி கேட்டோம்” என மார்தட்டிப் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால், கல்முனை பிரதேச செயலகத்துக்கு கணக்காளரைக்கூட பெற்றுத்தர முடியவில்லையெனக் குற்றஞ்சாட்டினார்.  

“பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத ஈழத்தையோ, உரிமையையோ எவராலும் பெற்றுத் தர முடியாது என்பதை நான் ஆணித்தரமாகக் கூறுகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .