Princiya Dixci / 2021 ஜூன் 07 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை, காரக்காடு பிரதேசத்தில் மின் உபகரணத்தில் தேநீர் தயாரித்த 56 வயதுடைய பெண்ணொருவர், மின்சாரம் தாக்கி, இன்று (07) மரணமடைந்துள்ளார்.
வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பேரின்பம் தெய்வானை என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
காரக்காடு பகுதியில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்கின்ற தனது மகளை நலம் விசாரிக்கச் சென்றுருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின் உபகரணத்தில் சேதமடைந்திருந்த வயர் வழியாக மின்சாரம் தாக்கியதில் இவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தை, திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டு, குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தார்.
செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த சடலம், பிரேத மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago