2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘தேர்தலை நடத்தவேண்டுமென ஜனாதிபதி மாத்திரமே ஆர்வமாகவுள்ளார்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த, ஜனாதிபதி மாத்திரமே தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அமைப்பாளர் ஜீ.ஹரிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாமை ஒரு ஜனநாயக உரிமை மீறலாகுமென்றார்.

இந்தத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. ஆனால்,  ஐ.தே.கவின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுவொரு ஜனநாயக உரிமை மீறலென அவர்களுக்குத் தெரியாமலில்லை. இருப்பினும், ஜனாதிபதி மாத்திரமே தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டு மென்பதில், கிழக்கு மாகாணத்தின் சிவில் அமைப்புகள், இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி, அரசியல் உரிமை, மக்களின் பாதுகாப்பு, கிராம மட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்வமாகவுள்ளாரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X