2025 மே 02, வெள்ளிக்கிழமை

தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தமது குடும்பங்கள் புறக்கணிக்கும் நிலையேற்படுமென, இடைநிறுத்தப்பட்டோர் எச்சரித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தின் இணைப்பாளர் கமல்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம், இது தொடர்பில் மகஜர் இன்று (10) கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலை காரணம் காட்டி இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்களை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வழங்குமாறு கூறியிருந்தபோதிலும் இதுவரையில், அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுக்கவில்லையென, சங்க இணைப்பாளர் தெரிவித்தார்.

இதற்குரிய தீர்வை விரைவாக வழங்காதுபோனால், இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தின் 6,547 குடும்பங்களும் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதுடன், மாற்றுவழியைக் கையாளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .