2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தேர்தல் சட்ட விதிகளை மீறிய மூவர் கைது

Janu   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்ட விதிகளை மீறி மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டிய மூவர், ஏறாவூர் பொலிஸாரால் சனிக்கிழமை (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.   

சந்தேக நபர்கள் ஏறாவூர் எல்லை வீதி மற்றும் லக்கி வீதியைச் சேர்ந்த 44, 50 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவற்றில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் சின்னம் மற்றும் ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் எல்லை நகர் வட்டார வேட்பாளரின் பெயர் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

மாலை வேளையில் வீதியோர சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்கும் போது முச்சக்கர வண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதுடன் சந்தேகநபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரின்பராஜா சபேஷ்  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .