2025 மே 01, வியாழக்கிழமை

தேர்தல் சட்டவிதிகள் மீறல்; மட்டக்களப்பில் 4 முறைப்பாடுகள்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன்

இவ்வாண்டுக்கான பொதுத் தேர்தல் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்துக்கு இதுவரை 04 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அரச வாகனத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக, முதலாவது முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

அத்துடன், வாழைச்சேனை பிரதேச செயலாளரின் பொறுப்பிலுள்ள உடமைகள் அவரது அனுமதியின்றி, அரசியல்வாதியால் அகற்றப்பட்டதாகவும், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் நேர்முகத் தேர்வொன்று நடத்தப்பட்டு, ஆடைத் தொழிற்சாலையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி, அபேட்சகர் ஒருவருக்கு வாக்களிக்கும்படி கோரப்பட்டதாகவும் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.

மேலும், அரச உத்தியோகத்தர் ஒருவர் பதவியிறக்கம் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலிருந்து மற்றுமொரு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .