Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 29 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தங்களுக்கான அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில்; நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தமிழ்ப் பெண்கள் முன்வர வேண்டும் என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் உள்ளூராட்சிமன்ற, மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பெண்கள் போட்டியிட்டு, தமது அரசியல் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பு, மட்டக்களப்பிலுள்ள மேற்படி கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை (28) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவித்தபோதே, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'மகளிர் பிரிவைக் கொண்ட பலமான கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி காணப்படுகின்றது. இலங்கையில் எந்தத் தேசிய கட்சியும் வழங்காத அரசியல் உரிமையை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெண்களுக்கு வழங்கியுள்ளது' என்றார்.
'மேலும், பெண்களுக்கான அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும். தமிழ்ப் பெண்களுக்கான நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், அதிகளவான பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்.
'எந்தக் கட்சியிலும் பெண்கள் சேரலாம் என்பதுடன், அந்தக் கட்சியில் தங்களுக்கான இடத்தை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள்; காணப்படுகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் எதையாவது செய்துள்ளார்களா என்றால், அது கேள்விக்குறியாகவே உள்ளது.
'யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மட்டக்களப்பில் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக உள்ளன. அவர்களுக்கு உரிய முறையில வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதுடன், அவர்களின்; பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எவரும் முன்வருவதுமில்லை. எனவே. இந்தப் பெண்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும்.
'கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப்; பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது பூச்சிய நிலையிலேயே இருந்து வருகின்றது. இந்த நிலை மாற்றமடைய வேண்டுமாயின், இம்மாகாணத்திலுள்ள அதிகளவான பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
15 minute ago
29 minute ago