2025 மே 07, புதன்கிழமை

தையல் இயந்திரங்கள் ​வழங்கி வைப்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி வழங்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை வேல்ட் விஷன் காரியாலயத்தில் இன்று (11) நடைபெற்றது.

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எட்வின் ரணிலின் வழிகாட்டலில், இவை வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வேல்ட் விஷன் நிறுவனத்தின் வாழ்வாதார பொறுப்பாளர் அ.கிருஷாந்த், கல்குடா கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த், வேல்ட் விஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிண்ணையடி, கண்ணிபுரம், நாசிவந்தீவு, பேத்தாளை, சுங்கன்கேணி, கல்மடு ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 16 பெண்களுக்கு 9 இலட்சம் ரூபாய் பெறுமதியில் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X