2025 மே 03, சனிக்கிழமை

தொடரும் கசிப்பு உற்பத்தி நிலையங்களின் முற்றுகை

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா ஆற்றை அண்டிய களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று, இன்றும் (24) முற்றுகை செய்யப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில், முதலைக்குடா கிராம அமைப்புகள், கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து இந்நிலையத்தை முற்றுகையிட்டு, கோடா உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் அண்மைக்காலங்களாக முற்றுகையிடப்பட்டு வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X