2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தொடர் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் (31) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத் துறையினர் பல சவால்களை எதிர்கொண்டுவருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினையும் மீறி செயற்படுவோரை கண்டறியும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர்ப் பகுதிகளில் பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

கூழாவடி, இருதயபுரம், மாமாங்கம், புன்னைச்சோலை மற்றும் பாலமீன்மடு ஆகிய பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, தேவையற்ற நிலையில்  திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் பொலிஸாரால் மூடப்பட்டதுடன், அநாவசியமாக நடமாடியவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

பாலமீன்மடு மீன்சந்தையில் இன்றைய தினம் அதிகளவான கூட்டம் கூடியிருந்த நிலையில், பொலிஸார் அவர்களை கடுமையான எச்சரிக்கைசெய்து திருப்பியனுப்பியதுடன், அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களையும் அங்கிருந்துசெல்லுமாறு எச்சரித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X