2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தொழிற்றுறைகளில் இளைஞர், யுவதிகளை பயிற்றுவிக்க வேண்டும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச உத்தரவாத தொழிற் தகைமையுடன் நிபுணத்துவத் துறைசார்ந்த தொழிற்றுறைகளில், நாட்டின் இளைஞர், யுவதிகளைப் பயிற்றுவிக்க வேண்டுமென, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவராக, பிரதமரிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்ட அவர், நேற்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறந்த தொழிற்பயிற்றி பெற்ற இளைஞர், யுவதிகளை உருவாக்குவோமேயானால், நாட்டின் மனித வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, பொருளாதாரத்தை ஈட்டி, நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் வளம் மிக்கதாக மாற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் அனைத்துச் சமூக இளைஞர், யுவதிகளின் அளவிடமுடியாத மனித வளத்தையும் அவர்களது எதிர்காலத்தையும் இனவாதம் பேசுவோர் வீணடிக்க இனி இடங்கொடுக்கக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X