2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தொழிலை நிரந்தரமாக்கக் கோரி ரயில் கடவை ஊழியர்கள் ஆ​ர்ப்பாட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 08 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (07) நடைபெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தந்த போது, கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வெளியேயுள்ள பிரதான வீதியின் ஓரத்தில் நின்று, ரயில் கடவை தற்காலிக ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
​ரயில் கடவை தற்காலிக ஊழியர்கள், தமது தொழிலை நிரந்தரமாக்கித் தருமாறு வலியுறுத்தியே, இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
"நாளொன்றுக்கு 250 ரூபாய் சம்பளமே எங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. பல சிரமங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எமது வேலையை நிரந்தரமாக்கி, சம்பள உயர்வை வழங்குங்கள்" என, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில், 72 பேர் இவ்வாறு ரயில்கடவை தற்காலிக ஊழியர்களாக உள்ளனரெனவும், பலமுறை தமது கோரிக்கையை முன்வைத்தும், தமது வேலை நிரந்தரமாக்கப்படவில்லையொனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்துக்காக, ஜனாதிபதி வருகை தரும் போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் சந்தித்ததாரெனவும், அவரிடம் தமது பிரச்சினைகளைக் கூறியதுடன், மகஜர் ஒன்றையும் கையளித்ததாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .