Kogilavani / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்பு தொடர்பான ஒரு வதிவிடச் செயலமர்வு மட்டக்களப்பு, பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.
சமூக அபிவிருத்தி நிறுவகம் (Institute of Social Development) மனச்சாட்சிகள் மையங்கள் தொடர்பான சர்வதேச கூட்டமைப்புடன் (International Coalition of Sites of Conscience) இணைந்து, இச்செயலமர்வை ஒழுங்கு செய்துள்ளது.
நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளில் சம்பந்தப்பட்டிருக்கும் நிபுணர்களின் பங்கேற்புடன் இச்செயலமர்வு நாளை புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.
'நிலைமாறு கால நீதி தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கென உத்திகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு சிவில் சமூக அமைப்புக்களை பலப்படுத்துவதே இச்செயலமர்வுகளின் நோக்கமாகும்' என செயலமர்வின் இணைப்பாளரும் ஆய்வாளரும் வளவாளருமான பெரியசாமி முத்துலிங்கம் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பலவற்றில் உண்மையைக் கூறுதல், நல்லிணக்கம், நினைவுகூறுதல் மற்றும் ஏனைய வடிவங்களிலான வரலாற்று ரீதியான நினைவுச் சின்னங்கள், நிலைமாறு கால நீதி நோக்கங்களுக்கென மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துதல், காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் தலைமறைவாகியிருக்கும் நபர்கள் தொடர்பாக தடய அறிவியல் பகுப்பாய்வுகள் மற்றும் ஏனைய முயற்சிகள் என்பவற்றை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருக்கும் நிபுணர்களின் குழுவொன்று இச்செயலமர்வில் வளவாளர்களாக செயற்படுகின்றது.


12 minute ago
27 minute ago
30 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
30 minute ago
45 minute ago