2025 மே 08, வியாழக்கிழமை

நுளம்புகள் பெருக காரணமாகவிருந்த 2 காணிகள் சுவீகரிப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு வெற்றுக்காணிகளை காத்தான்குடி நகரசபை இன்று திங்கட்கிழமை சுவீகரித்துள்ளதாக நகரசபைச் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் ஹாஜி முஸ்தபா வீதியை அண்டியுள்ள இந்த வெற்றுக்காணிகளில் குப்பைகள் காணப்படுவதுடன், டெங்கு நுளம்புப் பெருக்கம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ள இரண்டு காணிகளையும் 07 நாட்களுக்குள் துப்புரவு செய்துவிட்டு காத்தான்குடி நகரசபைக்கு காணி உரிமையாளர்கள் அறிவித்தால், நகரசபை ஊழியர்கள் சோதனை செய்து  காணிகள்  விடுவிக்கப்படும். 07 நாட்களுக்குள் இக்காணிகள் துப்புரவு செய்யப்படாதுவிடின், இக்காணிகளை நகரசபை முழுமையாகச் சொந்தமாக்குமெனவும் அவர் கூறினார்.

மேலும், இந்தக் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான அறிவித்த பலகை அக்காணிகளில் இடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X